மூர்க்கனும் விழைவியும் – கீதிர் கவிதைகள்

கவிஞர் ஆனந் குமார் முகநூலில் கீதிர் என்பவரின் கவிதைகளை பகிர்ந்து பாராட்டியிருப்பதாக நண்பர் ஒருவர் அனுப்பி வைத்தார். கீதிரின் முகநூலில் போடப்பட்டிருந்த கவிதைகளை வாசித்துப் பார்த்தேன். சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.  நவீன கவிதைகளின் அடிப்படையான சிக்கல் இலங்கைச் சூழலில் படைப்புச் சார்ந்து அதன் மொழி சார்ந்து இருக்கிறது. கீதிரின் கவிதைகளின் படைப்பு மொழியில் வெளிப்படும் ‘பச்சையான பெண்’ அல்லது ‘விழைவு கொண்ட பெண்’ உடனடியாக கவனத்தை …

வேழாம்பல் தவம் – மேலும் சில கேள்விகள்

வேழாம்பல் தவம் நேர்காணல் தொடர்பில் பிரான்சைச் சேர்ந்த எழுத்தாளரும் விமர்சகருமான ப. பார்தீ மேலும் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். அவருக்கான பதில்களைக் கீழே தொகுத்திருக்கிறேன். அன்புள்ள தர்மு பிரசாத், கிரிசாந், கேள்வி : இலக்கியம் சார்ந்த உங்கள் உரையாடல் ஒரு படைப்பாளியின் அகத்தேடல், மொழி, புனைவு, இலக்கிய ரசனை ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பைத் தருகிறது. குறிப்பாக, படைப்பு உருவாகும் உள்முரண்பாடுகளையும் எழுத்தாளன் தன்னைக் கடந்து செல்ல வேண்டிய அவசியத்தையும் பேசுகிறது. …

வினாத்தாள் கசிவா?

தீவிர இலக்கியப் படையில் இளம் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைப்பதற்கான தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருப்பதாக நண்பரொருவர் அனுப்பியிருந்தார். இந்தச் சமூகம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை, இப்படி ஒரு பம்பாய் வெங்காயத்தை வினாத்தாளென இலக்கியத்தின் அரிவரி மாணவர் கூட எழுத மாட்டார்கள். கண்ணைத் திறந்து வைத்துக் காட்டினாலும் உலகைப் பார்க்க மாட்டேன் எனும் மடமை கொண்டிருந்தால் மாத்திரமே இப்படி ஒரு வினாத்தாளை உருவாக்க முடியும். கொஞ்சமாவது சென்சிபிலிட்டி …

மயிரனைய

வணக்கம் அண்ணா இலக்கிய உலகம் பரபரப்பாக இருக்கிறது போல. முகநூலில் உங்கள் ஆசானை போட்டு பொழக்கிறார்கள். தேவதாசிகள் பற்றி அவர் சொன்னதற்கு அடிக்கிறார்கள். ஆனால் அது எனக்கு விளங்கவில்லை. காலையில் ஒரு போஸ்ட் பார்த்தேன். அதில் ஒருவர் யாரெல்லாம் ஜெயமோகன் பட்டியலில் இல்லையோ அவர்கள் எல்லாம் தான் நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்லியிருந்தார். அதை எழுதியவரும் ஒரு எழுத்தாளர் என அவரது முகநூலில் பார்த்தேன். காலச்சுவட்டில் புத்தகமெல்லாம் போட்டிருக்கிறார்கள். நிறைய …

பொம்மலாட்டக்காரனின் கைநூல்

வணிகத்திற்கும் அறமும் வாழ்க்கை நோக்கும் அடிப்படையானது. வணிக சினிமாவின் வளர்ச்சி வெகுசனக் கருத்துகளை தீவிரக் கலைகளிலிருந்து பெற்று விரித்தெடுப்பது. வெகுசனக் கலைகள் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பவை அல்ல. அதிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு சாராம்சமான கதையைப் பின்னியெடுக்கின்றன. கூடை முடைவது என்ற உவமை இலக்கியத்தில் உண்டு. ஒரு நாவலை எழுதி செம்மையாக்கம் செய்யும் பொழுது ஒவ்வொரு பகுதியாக முடைந்து, முடைந்து அதை இறுதியில் இறுக்கி இறுக்கிச் செறிவாக்குவதை அப்படிச் சொல்வார்கள். சினிமாவில் …

அகங்காரன் – கடிதம்

வணக்கம்  ஜெ. மோ அவர்கள் வெண்முரசு முதலாவது பகுதியில் அகங்காரம், செருக்கு என்பவையே இந்த உலகை இயக்கும் விசைகள் என்கின்றன. ஆனால் நமது அறநூல்கள் மற்றும் பொது வாழ்வு என்பன அகங்காரம், செருக்கு போன்றவற்றை எதிர் மறை சக்திகளாகவே புரிதலை தருகின்றன. இதற்குடையில் இன்று இளங்கோ அவர்களுக்கு நீங்கள் எழுதிய பதிவில் “எளிய அகங்காரம்” என்ற சொல்லை பாவித்து இருக்கிறீர்கள். இந்த நிலையில் “அகங்காரம், செருக்கு ” என்பவற்றை நாம் …

ஒளிநாகம் – சதீஷ்குமார் சீனிவாசன்

நிழல் புற்று இந்த நிழல் ஒரு புற்று இருள் கூடி இருள் கூடித் தணியும் வெளிச்சப் பரல்கள் அந்திகளின் வழக்கத்தில் வழி தவறினேன் இன்னாரில்லை சென்றுசேர மனம் தவறி உடைகின்றன பொருட்கள் உடனிருந்தாலும் அன்பில்லை தூரத்தில் ததும்புகிறது கானல் உலகு நிழல் புற்று படிகிறது சொற்களில் நேர்மையிழந்த சொற்கள் யாருக்கு என்ன விலை எதற்கு எந்த விலை பாலங்கள் முடிந்தாக வேண்டிய நிர்பந்தங்கள் வீடுபோய் சேர வேண்டும் மயங்கள் தீர …

சிறிய ராட்சசர்கள் – எதிர்வினை

இளங்கோ டிசே தன் எதிர்வினையை முடித்திருக்கிறார். “ஜெயமோகனை எதிர்கொள்ளல்“. அந்த மூவர் எனச் சுட்டி என்னையும் தர்மு பிரசாத்தையும் யதார்த்தனையும் சொல்கிறார். எங்கள் பெயர்களை எழுதவே அவரின் கை கூசுகிறது எனத் தோன்றுகிறது. இத்தனை நஞ்சு ஒருவரை உள்ளிருந்தே அழிக்குமொன்று. எந்த விபாசனாவிலும் அதைக் கரைக்க முடியாது. நாணல்களும் சில புயல்களைத் தாண்டி நிற்கும் தான். ஆனால் ஆலமரங்களோ காலங்களின் பெருக்கைத் தாண்டி நிற்கும். ஏதோ ஒரு புயலில் அழிந்தே …

கண்ணாடிக்கு அப்பாலும் இப்பாலும்

இளங்கோ டிசே தன் பங்கரிலிருந்து கையில் கிடைத்த தாள்களில் எழுதிய சிறு குறிப்புகளுடன் தைரியமாக மேலே ஏறி வந்திருக்கிறார். அதற்கு முதலில் வாழ்த்துகள். அப்படியாவது நம் ஈழத்துச் சூழலில் இருந்து ஒருவராவது வந்து தன் நம்பிக்கைகளைச் சொன்னால் தான் கூருணர்வுள்ள வாசகர்களுக்கு அவர்களின் மதிப்பீடு, ரசனை பற்றித் தெரியும். மொழிநடையில் முன்னோடிகளினது செல்வாக்கினைக் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘முளைத்தலெனும் தொடர்‘ குறிப்பில் நட்சு முதல் டிசே வரை அவர்களின் இயல்புகளின் …

இருத்தலைக் காட்டுவது – எதிர்வினை

“ஒவ்வொரு தனிமனிதனும் தனி ‘உலகம்’. இந்த உலகங்களையெல்லாம் ஒருகுடையின்கீழ் கொண்டுவருவதும், சிந்தனையை ஒழுங்கமைக்க முயற்சிப்பதும் இந்த தொழில்நுட்ப யுகத்தில் மாற்றமுற வேண்டிய சிந்தனை. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகளாக இவற்றை கொண்டாட வேண்டிய தேவையும் இல்லை.இகழவேண்டிய அவசியமும் இல்லை. குறைந்தபட்சம் இலங்கையின் தமிழ் அரசர் வரலாற்றைக் கூட பாடப்புத்தகங்களில் பதிக்க முடியாத ஏதிலிகள், காத்திரமான படைப்புகளை அனுப்பியாவது இருத்தலை காட்ட வேண்டாமா? அதேநேரம் எதிர்காலம், காத்திரமான இலக்கியம் …