நறுந்தூபத்தின் புகைக்கயிறு

பாலையின் கோடி கோடி மணற்துகள்களும் ஒரு நாளின் பிரிவின் அணுக்கள் எனச் சூழ்ந்திருக்கிறது. இறுக்க மூடிய விழிகள் வெளிச்சத்தில் திறந்து கொள்ளும் போது புள்ளிப் புள்ளியாய் தோன்றும் பொட்டுகள் மெய்யை ஒருகணம் கலங்கித் தெளிய வைக்கிறது. பாலையின் ஒளி வெப்பம். உடல் வியர்த்து உப்பு மலர்ந்திருக்கும். நான் உன்னிடம் வருகிறேன் மடந்தையே. இவ் வெப்பத்தின் ஒளியில் இளம் நெல்லிக்கனிகள் உதிர்ந்து பரவிக் கிடக்கின்றன. எடுத்து உண்டால் நாக்குளிர்ந்து நீரூறும் கனிகள். …

வையத்தைப் பாலித்திட

பாணர்கள், புலவர்கள், கவிஞர்கள் காலாதிகாலமாகத் தம் பொருளாதார வறுமையையும் புரவலரை அண்டி வாழும் நிலையையும் பாடியிருக்கிறார்கள். நவீன கவிஞர்கள் ஒடிந்த தேகத்துடன் ஊர் சுற்றி உழன்றதையும் உழல்வதையும் இந்தச் சமூகம் பார்த்து உள்ளூர மகிழ்ந்தபடிதான் இருக்கிறது. சோற்றுக்கு வழியில்லாத நாய். உனக்கேன் செருக்கு என வசவுகிறது. சிறுவயதிலிருந்து சோற்றுக்கு வழியற்று அலைந்த காலகட்டங்கள் எனக்கும் உண்டு. எதிர்காலத்திற்கும் எந்த உத்தரவாதங்களும் இல்லை. மூளைக்குப் பதிலாக வயிற்றுக்கென்று உள்ள அறிதலிலிருந்து இலக்கியத்தைத் …

கார்காலமில்லை

தோழி! இது தலைவன் வருவேன் எனச் சொல்லிய கார்காலமில்லை. அதோ பார் பிடவம் மலர்கள் அவிழ்ந்திருக்கின்றன. முன் கார்காலத்தின் மழையிது. மேகங்கள் இனி வரப்போகின்ற மழைக்காலத்திற்காகத் தங்கள் சட்டைகளைப் பிழிந்து உதறிப் போட்டபடி ஆகாயக் கொடியில் அலைப்புறுகின்றன. வானத்தின் முழங்கும் குரல் கேட்கின்றது. உன் காதுகள் கூர்ந்து அதைக் கேட்கின்றன. எதிர்பார்த்து நின்ற ஒரு சங்கீதம் போல். வருகையின் பேரொலியன ஓங்கும் பேரிகை போல் விசும்பு இடிகொட்டுகிறது. அம்மழையைப் பார்த்த …

சிறிய கடவுள்

தினசரி என்பது நூற்றுக்கணக்கான சிறு கணங்களால் ஆனது. பெரியதுகள் நிகழும் வாழ்க்கைகள் உண்டு. வாழ்வின் தீவிரம் மிகுபவை அவை. அவற்றுக்கான விழைவுகள் அடைவுகள் உச்சங்கள் தனியானவை. சிறியவைகள் நிகழும் கோடிக்கணக்கான வாழ்க்கைகள் மண்ணிலுண்டு. அவையே பூமியை வாழும் பெரும்பான்மை.அவ்வாழ்க்கைகள் அன்றாடத்தில் சிறிய மகிழ்ச்சிகளில் பெரிதும் மகிழ்ந்து, சிறிய துக்கங்களில் பெரிதும் துயருற்று, சிறிய குற்றங்களுக்குச் சிறிய தண்டனைகள் கொடுத்து வாழ்வை அக்கணங்களின் சிறியவைகளால் வாழ்ந்து செல்கின்றன. பெரிய கடவுள்கள் கேட்கும் …

இந்த முறையாவது

இடையில் எழுந்தமர்கிறதுஒரு தணற் பாம்பு எவ்வளவு நிரப்பியும் ஓட்டையாய் வழியும்எங்கு திரும்பினும் நெற்றியில் இடிக்கும் வாழ்வு. ஆலகாலத்தைக் கடையக்கயிறு வேண்டும்ஓயாத தலைவலியில் கிடந்த உன் தலையை மத்தாக்கினோம்உடம்பைக் கயிறாக்கினோம்இரண்டு பக்கமும் அசுரர்கள் கூடிக் கடைந்தோம் விஷம் தீராத பாயில்நீ கிடந்து உறங்கு யுகம் யுகமாய்எனது காலிடையில் பூஞ்சணம் படிந்த பாம்புதன் தலையை அறுத்துவிட்டுச்சுருண்டு படுக்கும்ஒவ்வொருநாளும் உனக்கு என் வருத்தங்கள் கண்ணேஉனக்கு என் பூஞ்சணம்உனக்கு என் அசலிருள் இந்த முறையாவது ஏமாறாதே.

அற்பன்; எச்சில்; பிணம்

அழியாது உலையும் வேட்கையின் வெப்பக் கரங்கள் உட்தலையைக் கிளறியபடியிருக்கிறது. இன்னதென்றில்லாத ஒன்று இவ்வாழ்க்கையை வாள் வீச்சுகள் போல வெட்டிக் கொண்டே செல்கின்றது. காதலோ காமமோ அதன் தலைகீழ் உச்சத்தில் இரக்கமற்றது. எந்த நிபந்தனையுமற்ற வாழ்க்கைக்கு எல்லா நிபந்தனைகளையும் இட்டு நிரப்பிவிட்டு அச்சாடியை உடைத்து வீசிக்கொண்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் சகித்து இடைவிடாமல் பொருதிக் கொண்டு இரண்டு கரங்களும் குத்தீட்டிகளென அலைகிறோம். அன்பின் இரத்தத்தைக் குடிக்காத நாவில்லை. அதைக் குத்திச் சீண்டாத பொழுது …

தற்பிறப்பு

சிறுவயதில் வீட்டில் ஏதாவது குழப்படிகள் செய்துவிட்டால் அப்பா அடிப்பார். விதிமுறைகள் கொண்ட நியாயமான அடிகள் விழும். நான் அடிக்குப் பயந்து வீட்டைச் சுற்றி ஓடுவதுண்டு, வீடு போதவில்லையென்றால் பக்கத்து வீடுகளுக்கும் சென்று ஓடுவதுண்டு. எங்களது வீட்டுக்குப் பக்கத்து வளவு ஒரு வாழைத் தோட்டம். சிப்பாலன் ஐயா என்பவருக்குச் சொந்தமானது. விரதகாலங்களில் தலைவாழை இலை வெட்டவும் லீவு காலங்களில் ஆமி – இயக்கம் விளையாடவும் அத்தோட்டத்தில் திரிவதுண்டு. நேர்த்தியாகச் சதுரஞ் சதுரமாக …

தங்கமே குட்டியே

நான் எளிமையான சொற்களைஅடுக்கிக் கொண்டிருந்த போதுநான் ஏற்கெனவே கட்டிய மாளிகைகளின் நிழல்எதிர்ப்பக்கமாய் விழத்தொடங்கி விட்டது பெருக்கெடுத்து மதகுடைத்த சொல்லாறு அடங்கிஅமைதியான கன்னமெனபிசிறற்று ஓடியது நான் மெளனத்துக்கு அஞ்சிக் கூப்பாடு போட்டஎன் சொற்களேஉங்களை நம்பியது என் தவறுதான்நீங்கள் என்னுடையவை அல்லநீங்களும் அல்ல ஒவ்வொரு நிரையாய் அடுக்கி வைக்கப்பட்டகார்ட்ஸ் கோபுரத்தின் இறுதி அட்டையைஎடுக்கத் திரும்பிய போதுஏதோவொன்றுஅதை வீழ்த்தியிருக்கிறது. அக்கணத்தின் விடுபடலுக்குவாழ்த்துக்கள்என் தங்கமே. அழகிய தெத்துப்பல்லெனபழைய கவிதைகளின் ஒரு பல்இந்தக் கவிதைக்குள்ளும் முளைத்திருக்கிறது. உனக்கும் …

குறிஞ்சியின் தலைவி

குறுந்தொகையின் காட்சிகளுக்குள் நேரே சென்று வைத்துவிடக்கூடிய அனாரின் கவிதையிது. குறுந்தொகைக் கவிதைகளுக்குச் சில பின்னணிக் காட்சிகளை எழுதி அவற்றை அதனோடு பொருத்தி வாசிக்கும் முறையையே எழுதி வருகிறேன். அதில் நவீன கவிதைகள் சங்ககாலக் கவிதைகளைச் சென்று மீளும் வரிகள் அலாதியான வாசிப்பை உருவாக்குகிறது. அது ஒரு நெடுங் கயிற்றை இங்கிருந்து இழுத்துப் பார்த்து அந்தப் பக்கம் இருப்பவரின் உணர்வை அறிந்து உள்ளூரத் தோன்றும் மகிழ்ச்சி. வேலன் வெறியாட்டு நிகழும் போதோ …

பணிவும் அகங்காரமும்

என்னிடமிருப்பது ஈடில்லாத ஒரு அகங்காரம். இன்னும் ஒன்றுமே குறிப்பிடும் படி நீ எழுதவில்லை உனக்கெதுக்கு இந்த ஆணவம். நீ உன் அகங்காரத்தாலேயே அழியப் போகிறாய். பணிதல் ஒரு நற்குணம் போன்ற பல பரிந்துரைகளை அண்மைக்காலமாக வழக்கத்தை விட அதிகமாகவே நண்பர்கள் சொல்லி வருகிறார்கள். உனது நன்மைக்குத் தான் சொல்கிறேன். பலரும் இப்படி அபிப்பிராயப்படுகிறார்கள் என்று சற்றுத் தயங்கிய முறையில் சொல்பவர்களும் உண்டு. நான் எவ்வளவு அகங்காரம் கொண்டவனோ அதேயளவு பணிவும் …