சினிமாவா இலக்கியமா சரியாக ஒரு விடயத்தை கடத்தும். இது அரசியல் கேள்வி தான். தமிழர்களின் தேசநிலைப்பாட்டை இலக்கியங்கள் வாயிலாக நிறுவுவதா இல்லை சல்லியர்கள், மேதகு போல சினிமாக்களினால் விளங்கப்படுத்துவது சரியாக அதை கடத்துமா. தணிக்கை தடைகளை கடந்து உண்மை தாங்கும் அல்லது உணர்வு தாங்கும்…
எதிரொலிப்பு : சமகாலக் கலைக் காட்சி
1980 கள் தொடக்கம் சமகாலம் வரை ஈழத்துக் காண்பியக் கலைஞர்களின் பல படைப்புகளின் கண்காட்சி ஒன்று நாளை துவங்க இருக்கிறது. ஈழத்தின் காண்பிய மரபு பற்றிய பொதுச் சமூகத்தின் கவனம் உள்ளூரளவில் மந்தமானது. சர்வதேச அளவில் ஈழத்து காண்பியக் கலைஞர்கள் அடைந்திருக்கும் இடத்தை பற்றிய…
மூதன்னை தொட்ட மலர்
நேற்று மாலை ‘குக்கூ’ சிவராஜ் அண்ணாவிடமிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. ஓர் ஒளிப்படமும் குரற்பதிவும் இருந்தன. காந்தியவாதத்தின் பழுத்துக் கனிந்த தமிழ் முகமான மூதன்னை கிருஷ்ணாம்மாள் ஜெகந்நாதன் கொடிறோஸ் வாசித்துக் கொண்டிருந்தார். கண்கள் விம்ம அக்காட்சியை திரும்பத் திரும்பப் பார்த்தேன். எத்தனை களங்களைக் கண்ட…
தன்னறம் விருது 2025 : ஆவணப்படம்
கடந்த வருடத்திற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கப்படுபவர்களைத் தன்னறம் குழுவினர் எடுக்கும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. ஒவ்வொரு ஆளுமையினதும் துல்லியமான இயல்புகளையும் உடலசைவுகளையும் கைப்பள்ளத்தில் அள்ளிச் சேர்க்க முனைபவை. ஷோபா சக்தியின் ஆவணப்படம் என்…
கடுதாசி நட்சத்திரம் – தர்மினி
கவிஞர் தர்மினியின் புதிய கவிதை நூலான கடுதாசி நட்சத்திரம் இம்முறை நிகழ்ந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். மிகச் சமகால அழகியல் கொண்டவை அவரது கவிதைகள். தமிழ்க் கவிதையில் நீரில் அலையடிக்கும் சிறு…
கல்விரல், சிறகை : commonfolks
சென்னை புத்தகக் கண்காட்சியில் கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினூடாக வெளியாகியிருக்கும் கல்விரல் (நாவல்), சிறகை (குறுநாவல்) ஆகியவற்றை இணையத்தளத்தில் வாங்குவதற்கான இணைப்புகள் கீழேயிருக்கின்றன. இந்தியாவில் வாழ்கின்ற வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசகர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். கல்விரல் : இணைப்பு சிறகை…
கல்விரல் – கடிதம்
வணக்கம் கிரி, வெண்முரசு நாவல் தொகுதி முடிந்த பின் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர தவித்த வேளையில் கிணற்று கட்டில் ஏறி குதிப்பதா வேண்டாமா என்று மனம் தத்தளிப்பதுபோல கல்விரல் நாவலை வாசிக்க எடுப்பதும் பின்னர் வாசிக்காமல் வைப்பதுமாக இரு நாட்கள் ஓடிய பின்,…
முதற் கனவின் வெம்மை : பிறழ்
முதல் ஆக்கத்தை ஒரு வடிவத்தில் முழுமை செய்து அதை வெளியிடும் தருணம் அரிதானது, முதலாவது என்பதாலேயே. எனது கொடிறோஸ் எனும் குறுநாவலை முடித்த பொழுது உலகின் சிறந்த நூல்கள் இருக்கும் வரிசையில் வைக்கப்பட தகுதி வாய்ந்தது ஒன்றை எழுதி விட்டேன் என உளப்பூர்வமாக நம்பினேன்….
வரிக்கு வரி உண்மை
போரில்லாத காலத்தில் மன்னன் வேட்டைக்குப் போனது போல புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும் சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு….
சிறகை, கல்விரல் – ஒரு வாழ்த்து
“சிறகை, கல்விரல் இரண்டும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புகள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு வாசகனாகவே இச் சொல்லை இங்கே வைக்கிறேன். நாவல் அடிப்படையில் வரலாறு, தத்துவம் இரண்டினதும் கலை நிகழ்வு என்கிறார் ஜெயமோகன். இக்காலம் நாவலுக்குரியது. அதனுடைய பண்பாட்டுப் பெறுமானம் பெரியது. இம்மாபெரும்…