புதிய நாவல்கள் – பிரான்சில்

அண்மையில் வெளியாகிய என் புதிய நாவலான ‘தத்வமசி’, யதார்த்தனின் ‘தோறை’, தர்மு பிரசாத்தின் ‘வண்ணச்சீறடி’ ஆகிய நாவல்கள் பிரான்சிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு தபால் மூலமும் கிடைக்கும். தர்மு பிரசாத்தின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு நூல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.  தேர்முட்டித் தேங்காய் உடைக்கக் கூடுவது போல அல்லோலகல்லோலப் படாமல், லாச்சப்பலின் சட்ட ஒழுங்கைக் குலைத்து கண்ணாடிகளை உடைத்துக் கலகத்தில் ஈடுபடாமல், குறிப்பாக ஈழத்தமிழர் மானத்தை மீண்டும் …

போரிலன் ஆதல் : யதார்த்தன் – செவ்வி

ஈழப் புனைவுகளில் வடிவ கச்சிதத்தை அடைந்தவர் ஷோபாசக்தி. அவருடைய படைப்புகளில் நிகழ்ந்தது ஈழப் புனைவுகளின் ஓர் உச்சம். அவரது நாவல்கள் வடிவத்தால் சிறியவை. சிறு கத்தியால் கச்சிதமாக நறுக்கப்பட்டவை. ஆனால் புனைவினால் சாத்தியமான உச்ச எல்லைகளைத் தொட்டு மீளக் கூடியவை. போரின் வன்முறை, அராஜகம், அதிகாரத்தின் முன் சமானியனின் தத்தளிப்பு, நவீன அரசின் குரூரம் போன்ற தனிமனித அனுபவ எல்லைக்குள் இருந்து அமைப்பை, அதிகாரத்தை விமர்சனபூர்வமாகப் பேச அவருடைய சிறிய …

வெள்ளி வீதியில் புதிய நாவல்கள்

சுவிஸில் நவம்பர் 1 நிகழவிருக்கின்ற வெள்ளி வீதி இலக்கியச் சந்திப்பில் எனது தத்வமசியும் தர்மு பிரசாத்தின் வண்ணச் சீறடியும் யதார்த்தனின் தோறையும் விற்பனைக்கு கிடைக்கும். ஆர்வமுள்ள நண்பர்கள் நாவல்களை வாங்கி வாசித்து, உங்கள் கருத்துகளை விரிவாக எழுதி அனுப்புங்கள்.

அமுக்கி அரசு – ஷோபசக்தி

எழுத்தாளர் யதார்த்தனின் ‘தோறை’ நாவல்கள் வந்த பொதி, யாழ்ப்பாணம் தபால் நிலையத்திலுள்ள சுங்கப் பிரிவால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. நாவலில் இராணுவம் குறித்த சில சொற்கள் உள்ளதுவே காரணம் எனச் சாட்டுச் சொல்லப்பட்டுள்ளது. நாவலின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து அனுமதி கிடைத்த பின்பே புத்தகப் பொதியை விடுவிக்கலாம் எனச் சுங்கப் பிரிவு யதார்த்தனிடம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட புத்தகப் பிரதி குறித்து அந்த அமைச்சு எதுவுமே சொல்லாது. புத்தகப் …

இடதுசாரி அரசாங்கமும் எழுத்தாளரும்

யதார்த்தனின் புதிய நாவலான தோறை காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வெளிவந்து ஒரு கிழமை இருக்கும். வெளிவந்து இரண்டாவதோ மூன்றாவது நாள் யதார்த்தன் தனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை பகிர்ந்திருந்தார். தோறை நாவலை அடிப்படையாகக் கொண்டு முனைவர் பட்டம் செய்யவிருப்பதாக இந்தியாவிலிருந்து ஒருவர் அதற்கு உதவி கேட்டு அனுப்பியிருந்தார்.  இப்போது நாவல் வரவிருக்கும் சுவிசில் நிகழும் வெள்ளி வீதியில் கிடைக்கவிருக்கிறது. இலங்கைக்கான புத்தகங்கள் நேற்றே கிடைத்துவிடும் எனச் சொல்லி …

இரு நாவல்கள்

யதார்த்தனின் ‘தோறை’, தர்மு பிரசாத்தின் ‘வண்ணசீறடி’ இரண்டு நாவல்களும் தற்போது இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம். கிரிசாந் * “காலச்சுவடு பதிப்பகத்தால் செம்படெம்பர் மாதம் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய தோறை நாவல் தற்பொழுது சென்னையில் உள்ள காலச்சுவடு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் கிடைக்கிறது. குறித்த புத்தகக் கடைகளில் இணைய வழிகள் மூலமும் இந்திய , தமிழ்நாட்டு நண்பர்கள், வாசகர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான புத்தகங்கள் விரைவில் கிடைக்கும்” …

தோறை – யதார்த்தன்

“என்னுடைய இரண்டாவது நாவலான ’தோறை’ செப்டெம்பர் 2026 இல் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து வெளியாகின்றது. இவ்வருடத் தொடக்கத்தில் இந் நாவலை எழுதி முடித்திருந்தேன். முதல் நாவலான நகுலாத்தைக்கும் தோறைக்குமான பயணம் என்னளவில் முக்கியமானது. ஒரு எழுத்தாளரின் இரண்டாவது நாவல் என்பது அவர் எந்தச் சாட்டும் சொல்ல முடியாதபடிக்கு நாவலாக ஆகி இருக்க வேண்டும். இந்நாவலை எழுதும் போதும் சீரமைக்கும் போதும் அடைந்த  உணர்வுகளும்  புனைவில் வாழும் அனுபவமும் வாழ்வு மீதான பற்றுதலையும் நம்பிக்கையையும்  செறிவாக்கியபடியே இருந்தது. …

சிறிய ராட்சசர்கள் – எதிர்வினை

இளங்கோ டிசே தன் எதிர்வினையை முடித்திருக்கிறார். “ஜெயமோகனை எதிர்கொள்ளல்“. அந்த மூவர் எனச் சுட்டி என்னையும் தர்மு பிரசாத்தையும் யதார்த்தனையும் சொல்கிறார். எங்கள் பெயர்களை எழுதவே அவரின் கை கூசுகிறது எனத் தோன்றுகிறது. இத்தனை நஞ்சு ஒருவரை உள்ளிருந்தே அழிக்குமொன்று. எந்த விபாசனாவிலும் அதைக் கரைக்க முடியாது. நாணல்களும் சில புயல்களைத் தாண்டி நிற்கும் தான். ஆனால் ஆலமரங்களோ காலங்களின் பெருக்கைத் தாண்டி நிற்கும். ஏதோ ஒரு புயலில் அழிந்தே …

வாற்பேத்தை வாழ்க்கை – யதார்த்தன்

“சில மாதங்களுக்கு முன்பு இதே அரசின் சுங்கத்துறை ஈழத்தின் சில இலக்கிய நூல்களைத் தடுத்து வைத்தது. அதற்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் இணைந்து  யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்தோம். இன்றைக்கு விருதிற்கு  முன்னால் அண்ணாந்து இருப்பவர்கள், இதற்கு முன்னால் அவற்றை வாங்கி வீட்டில் ஷோக் கேசை அலங்கரித்தவர்கள், கண்ணாடியில் குஞ்சி மயிரைத் திருத்தி விட்டி பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு எழுத்தாளரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு சொல் கூடப் பேசவில்லை. …

சிறகை, கல்விரல் – ஒரு வாழ்த்து

“சிறகை, கல்விரல் இரண்டும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புகள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு வாசகனாகவே இச் சொல்லை இங்கே வைக்கிறேன். நாவல் அடிப்படையில் வரலாறு, தத்துவம் இரண்டினதும் கலை நிகழ்வு என்கிறார் ஜெயமோகன். இக்காலம் நாவலுக்குரியது. அதனுடைய பண்பாட்டுப் பெறுமானம் பெரியது. இம்மாபெரும் அலை எழுந்து இன்னும் நெடுங்காலம் தமிழ் இலக்கியத்தை நிறைக்கும். கல்விரல் நாவலாகவும் சிறகை குறுநாவலாகவும் அதன் உள் விரிவையும் வடிவ நிறைவையும் கொண்டவை. கதையில் …