மூதன்னையின் இரண்டாம் தொடுகை

என் மூன்று ஆசிரியர்களின் ஆசி பெற்ற அந்த நாள் வியாச குரு பூர்ணிமா என அடுத்த நாள் யதார்த்தன் மெசேஜ் அனுப்பியிருந்தார். ஒவ்வொரு வருடமும் வரும் வைகாசி முழு நிலவு நாளை வியாசரின் பிறந்த நாளாக, குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் வெண்முரசு நிறைவடைந்த பின்னர் ஆண்டு தோறும் வெண்முரசு நாளாகாவும் அது கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய ஒரு நாளில் இத்தனை ஆசிகள் கிடைத்திருப்பது முதலில் மகிழ்ச்சியாகவும் இப்பொழுது பொறுப்பாகவும் …

மூன்று ஆசிரியர்கள்

இந்த நாள் போல ஒன்று எனக்குத் திரும்ப நிகழ முடியாது என்று தோன்றுகிறது. அரிதாகவே தன் கல்லுதட்டை இளக்கும் ஒரு தெய்வம் என்னைத் திரும்பிக் கூர்ந்து பார்த்துப் புன்னகைத்தது போல ஒரு நாள். காலையில் எழுந்த போது வட்ஸ் அப்பில் தர்மு பிரசாத் ஒரு லின்கை அனுப்பியிருந்தார். ஜெயமோகன் தளத்தில் என்னைப் பற்றிய தமிழ் விக்கி குறிப்பை பகிர்ந்திருந்தார். ‘கிரிசாந்’ என்கிற பிரகிருதி தமிழ் இலக்கிய உலகில் வாழ்கிறான் என …

கனவாகவும் காவியமாகவும்

இம்மாத (ஏப்ரல்) நீலம் இதழில் வந்துள்ள ‘பெருங்காவியம்’ சிறுகதை எனக்குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது சிறுகதை அல்ல. ஏழு கன்னிமார்கள் என்னும் தொன்மத்தை மறு உயிர்ப்புச் செய்து காட்டியுள்ள அப்புனைவு கவித்துவமான மொழியுடன் கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஈழத்தனி நாட்டுக்கான போர்க்காட்சிகளின் சில கீறல்களையும் மனவோட்டங்களையும் உருவகமாக எழுதிக் காட்டியுள்ள அப்பனுவல், ஈழப்போரில் நடந்த நிகழ்வுகளும் அழிவுகளும் தன்னையழித்துக்கொண்ட வீரதீரங்களும் தியாகங்களும் குமுறல்களும் பகையழித்த கொலைகளும் பெருங்கனவாகிப் போனது …

பெருங்காவியம் – சிறுகதை

“மேகங்களால மண்ணுக்கு வர முடியாது எண்டு சொல்லுறது ஒரு நம்பிக்கை. ஆனா மண் மலையென முளைச்சு மேகங்களைப் போய்த் தொட முடியுமெண்டது கவிதை. பறந்து கொண்டிருக்கிற ஒண்டை இங்க இருந்து போய்த் தொட முடியும். ஆனா நான் ஏன் அதைச் செய்ய வேணும்?” என்றேன். ஏழு மின்மினிப் பூச்சிகளும் சிறகடித்து பச்சைப் பொட்டுகள் ஒளிர முகம் போல எழுந்து என் நிலைக் கண்ணாடியில் ஒரு முகம் போல ஆகின. அது …

சலாங்கையா – சிறுகதை

மலைப் பாறையின் இடையில் சிக்கிக் கொண்டது போல என் வலக்கை விரல்கள் அவரது கையால் உறுதியாகப் பிடிக்கப்பட்டிருக்க, தோளில் மறுகையைப் போட்டுக் கொண்டு “எங்கள ஏத்துக்குங்கன்னு சொல்லல. புரிஞ்சுக்குங்கன்னு தான் சொல்லுறன்” என்றார். நடுக்கமற்ற உடுக்கொலி போன்ற கார்வை கொண்ட குரல். குமிழ் விளக்கின் மஞ்சள் ஒளி அவரில் விளாசிக் கொண்டிருந்தது. கரிய பாறையில் நீர்மினுக்கம் போல. மின்னும் மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் பருத்த மீன்கள் போன்ற கண்களில் சுருக்கமான …

புஞ்சி மல்லி – குறிப்பு

ஏப்ரல் உயிர்மை இதழில் எழுத்தாளர் கிரிசாந் அவர்களின் “புஞ்சி மல்லி” வாசித்தேன். சந்தனி என்னும் இளம் பெண்ணிற்கும், கந்துல என்னும் குட்டி யானைக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கோபித்துக் கொண்டு, காட்டில் தொலைந்து போன கந்துல குட்டியை சந்தனியுடன் நாமும் சேர்ந்து தேடுகிறோம். புஞ்சி மல்லி என்றால், குட்டி தம்பி என்று அர்த்தமாம். அழகு. இருவருக்கும் இடையே உள்ள உறவை சந்தனியின் வழியாக சொல்லி இருப்பது …

புஞ்சி மல்லி – சிறுகதை

“யானைக்கு உன் குரல் தெரிந்து விட்டால் அது தான் அங்குசம்” என அப்பா சொல்லியது காதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. தென்னையோலைகளை அடித்துச் சுழற்றிக் காற்று வீசியது. பெரிய தும்பிக்கையிலிருந்து நீர் பிசிறுவது போல ஓசையுடன் ஓலைகள் துள்ளின. “கந்துல… கந்துல.. இங்கே வா..” எனக் கூவினேன். தொண்டை நரம்புகள் வறண்டு ஊசி குத்துவது போல வலியெழுந்தது. “கந்துல ஒரு குட்டி அற்புதம். அவன் உனக்கு வரலாற்றில் ஒரு மகத்தான வாய்ப்பை …

அலைந்து உழலும் ஒரு மனதின் கதைகள்

கொழும்பில் இயங்குகின்ற Barefoot gallery யில் அலெக்ஸ் ஸ்டூவெர்ட் எனும் ஓவியரின் கண்காட்சியொன்றை அண்மையில் பார்த்தேன். 1970களில் லண்டனின் கலைச் சூழலில் பணியாற்றிய காலத்தில், அலெக்ஸ் ஸ்டூவெர்ட்க்கும் (பி. 1958), மாயா ரத்வத்தேவுடன் நெருங்கிய நட்பு உருவாகியிருக்கிறது. மாயா ரத்வத்தே கண்டியின் செல்வாக்கு மிக்க குடும்பமொன்றில் பிறந்தவர். மாயாவின் நட்பு ஸ்டூவெர்ட்டின் வாழ்க்கையையும் கலைப் பயணத்தையும் இலங்கையுடனும் இந்தத் தீவின் மனிதர்களுடனும் இயற்கையுடனும் பிணைத்தது. மாயாவின் மூலம், அவர் 1980ஆம் …