நிஜந்தன் தோழன்

நிரப்புவதற்கு அப்பால் நின்றுவிட்டதுதூரம் முதலில் உன்னைத் தின்றுவிட்டிருக்கின்றனஇருவரில்ஒன்று போலிருந்த காயங்கள் மிச்சம்பேசியிருந்த கொஞ்ச வார்த்தைகள்,இனியில்லைமருந்துகளுக்கும் வலிகளுக்கும்மேலால் மேவி எழுகிற புன்னகை.அறியு முன்பேநழுவிவிட்ட முகமும் குரலும், சற்றுத் தாமதமாகவே வென்றிருக்கலாம் நீஉந்த வாழ்வையும்இந்தச் சாவையும் இனியில்லை உனக்குஇருண்டகாலத்துக் குரல்கள்,நித்திய விடுதலை,சமாதானிக்கட்டும் உனது வெண்மை. இல்லாது போனகருணையின் பாகங்கள் பொருட்டுஇன்னும் கொஞ்சம் கண்ணீர். ஒருநாள் வருவேன்உனது குரல் தொடுகிற தெருவில் மருந்து மணக்காத தாழ்வாரங்களில்குமிழ் எரிகிற இருளில்அவ்வப்போது கொள்கிற மாத்திரைகளில்சரிகிற புத்தகங்களில்கசிகிறதுனது குரல் …

நிஜந்தன் : அஞ்சலி

நேற்று மதியம் திடீரென்று என் ATM திறவுஇலக்கம் மறந்து விட்டது. சில கிழமைகளாக காசு எடுக்கவில்லை. எவ்வளவு நினைவில் துழாவியும் இலக்கங்கள் பகடைக் கட்டைகள் போல ஒவ்வொரு முறையும் புதிதாகச் சுழன்று விழுந்தன. நாளிற்கான மூன்று தடவைகளை அழுத்தினேன். மூன்றும் தவறு. தசை நினைவென திறவு இலக்கம் இருப்பது என் வழமை.  கடந்த இரண்டு கிழமையாக எழுதவும் மனநிலை கூரவில்லை. எழுதவும் வாசிக்கவும் மனம் பாய்ந்து கடிப்பதும் பிறகு கைவிட்டு …

லீலி : சிறுகதை

இம்மாதம் அச்சாகியிருக்கும் பங்குனி மாதத்திற்கான ஜீவநதி இதழில் எனது புதிய சிறுகதையான ‘லீலி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

மகேஸ்வரன் சேர் : அஞ்சலி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் ஆறாம் வகுப்பிற்குச் சேர்ந்து முதல் நாள் ஆங்கிலப் பாடம். மூன்று அடுக்குகளாக உயர்ந்திருந்த கட்டடத்தில் என் வகுப்பிருந்தது. மகேஸ்வரன் சேர் துணி ஜீன்சும் அரைக்கைச் சேர்ட்டும் போட்டுக் கொண்டு வந்து ஆங்கிலப் பாடம் தொடங்கினார். அவரது உச்சரிப்பு மிகவும் ஆங்கிலத்தனமானது. அவரது நாக்கும் உதடுகளும் சுழன்று மடங்கி ஆங்கில ஒலியை உச்சரிப்பது, கேட்பவருக்குப் புதிய அனுபவமாய் இருக்கும். ஒவ்வொரு நாட்டுப் பாணி ஆங்கிலமும் பேசிக் …

பரிஸ் – கல்விரல்

பரிஸ் நகரில் கடுதாசி நட்சத்திரம், கல்விரல், சிறகை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கின்றன. சுவரொட்டியில் உள்ள இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.

புஞ்சி மல்லி : சிறுகதை

இம்மாத உயிர்மை இதழில் எனது புதிய சிறுகதையான ‘புஞ்சி மல்லி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

பட்டு நூல் – கடிதம் 2

பட்டு நூல் வாசித்தேன். மிக அருமையான கதை. ஒரு யுத்த பூமியில் பண்பாடு என்பது எப்படி இருக்கும்னு காமிச்சிருக்கீங்க. அதை கதையில் விவாதமா அடுக்கடுக்கி வைச்சு சொல்லியிருப்பதும் அழகு. “பண்பாட்டில இருக்கிறதென்பது மீன் தண்ணிக்கை இருக்கிற மாதிரி …. உன்ர உடம்பால அதை அறிய வேணும்.” … அதெல்லாம் வாசிக்கும் போது ஆமால்ல… னு சொல்லத் தோணுச்சு… அப்புறம் விஷ்ணுபுரம் படிச்சிட்டு கோயில் கோயிலா சுத்தாதவங்க யாராவது இருப்பாங்களா.. எனக்கு …

கல்விரல் – குறிப்பு 4

ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும்  தொகுக்கப்பட்டுள்ளன.  ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இது இவரது சமீபத்திய நாவல். இத்தனை வருடங்கள் வாழ்ந்த பிறகு தோன்றும் பட்டறிவு,  இருத்தலைக் காப்பாற்றிக் கொள்வதே எல்லாவற்றிலும் முக்கியமானது. நாம் தனியல்ல, ஒரு …

பட்டு நூல் – கடிதம்

வணக்கம் கிரி, பட்டுநூல் கதை வாசித்து முடிக்கும்போது நிறைவில் கண்கள் குளமாகிவிட்டன. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த எங்கள் பண்பாட்டு தனித்துவம் என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது.  சிலைக்கு கண் திறக்கும் செயல் கலையாக மாறுமிடம், குருபாவா முகைதீன் பற்றிய தரவுகள், கதையில் யாழ்ப்பாண சித்தர் வரும் தருணம் போன்றவை கதைக்குச்சிறப்பான வாசிப்பனுபவத்தை அளித்தது. நன்றி. அன்புடன் மாக்கி * சிலைக்கு கண் திறப்பது போலத் தான் பகுத்தறிவும் …

அரவிந்தன் : அஞ்சலி

காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர், எழுத்தாளர் அரவிந்தன் இன்று காலமாகினார். நட்புடன் பழகுபவர். அவரது திடீர் இழப்பு காலச்சுவட்டுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் அறிவுச்சூழலுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய புன்னகையும் சாந்தமுமான முகம் இனியது. அவருக்கு என் அஞ்சலிகள்.