தத்வமசி : முற்பதிவு

“17ஆம் நூற்றாண்டின் சோழமண்டலக் கரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் டச்சுக்காரர்களின் காலனிய நிழல் படர்கிறது. குருதியும் அடிமை வணிகமும் பேரழிவும் மலிந்த பெருநிலத்தில், வாழ்வின் நிலையாமையை முகத்திலடித்தாற் போல் உணர்ந்து மனை துறக்கிறான் ஒருவன்.  அகத்தின் வெளிச்சத்தைத் தேடி அலையும் அவனுக்குக் காலம் சூட்டும் பெயர் ‘தத்வமசி’. கிரிசாந்தின் பிரம்மாண்டமான புனைவெழுத்து, வரலாற்றின் அந்தகார உண்மைகளையும் தத்துவத்தின் ஆழங்களையும் ஒன்றிணைக்கிறது. மானுட இருப்பைப் பற்றியும், அதன் நித்தியமான ஆன்மீகத் தேடலைப் பற்றியும் …

மாலு பாண் விற்பவர்

||பிழைப்புவாதத்திற்கும் விருது ரியாஸ் குரானா படைப்பாளிகள் என்பவர்கள் சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில், ஆளும் வர்க்கத்தின் ஏவலாட்களாகச் செயல்படும் அறிவுத்துறைத் துரோகத்தின் ஆகச்சிறந்த அடையாளம் கவிஞர் கருணாகரன். இது வெறும் பிழைப்புவாதத்தைக் கடந்த ஒரு கருத்தியல் வக்கிரம். தனது துரோகங்களையும் அரசியல் சமரசங்களையும் தந்திரமாக மூடிமறைக்க அவர் அரங்கேற்றும் நாடகங்கள் எந்தவொரு முதலாளித்துவத் தந்திரசாலியையும் மிஞ்சக் …

சிலந்தி வலையில் ஒரு பனித்துளி

  “எல்லா நிச்சயமின்மைகளுக்கும் அப்பால் இந்த வானத்தின் நிரந்தரம் என்னைத் திகைப்பூட்டிக் கொண்டேயிருக்கிறது” கருணாகரன்   தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்வருடத்திற்கான இயல்விருது ஓவியர் ட்ரோஸ்கி மருதுவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் கருணாகரனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2026 இற்கான கவிதைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஈழத்து இலக்கியத்தின் விடுதலைப் போராட்டத்தின் பெருநீரோட்டத்தில் கருணாகரனளவுக்கு தவிப்பும் கொந்தளிப்புமான கவிஞனின் குரல் இல்லையெனவே நினைக்கிறேன். விடுதலைப் போராட்டம் நெடுகிலும் அதன் மைய விசையோடு சேர்ந்தியங்கிய …

தீராத கணக்கு – யூமா வாசுகி

யூமா வாசுகியின் தீராத கணக்கு கவிதையை இன்று திரும்பவும் வாசித்தேன். நண்பரொருவர் முகநூலில் பகிர்ந்திருந்ததாக சொன்னார். எத்தனையோ நாள் இந்தக் கவிதையில் வெளிப்பட்டிருக்கும் சத்தியாவேசம் என்னை நெக்குருகச் செய்திருக்கிறது. நினைவுகளின் மடிப்பில் அவ்வப்போது எழுந்து வந்து தொந்தரவு செய்வதுண்டு. கடைசி வரிகளை திரும்பத் திரும்ப மனது சொல்லிக் கொண்டேயிருக்கும். கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் கதையின் உச்சமான ஒரு உணர்நிலையின் இன்னொரு வடிவம் இந்தக் கவிதையில் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்ததுண்டு. …

அலைந்து உழலும் ஒரு மனதின் கதைகள்

கொழும்பில் இயங்குகின்ற Barefoot gallery யில் அலெக்ஸ் ஸ்டூவெர்ட் எனும் ஓவியரின் கண்காட்சியொன்றை அண்மையில் பார்த்தேன். 1970களில் லண்டனின் கலைச் சூழலில் பணியாற்றிய காலத்தில், அலெக்ஸ் ஸ்டூவெர்ட்க்கும் (பி. 1958), மாயா ரத்வத்தேவுடன் நெருங்கிய நட்பு உருவாகியிருக்கிறது. மாயா ரத்வத்தே கண்டியின் செல்வாக்கு மிக்க குடும்பமொன்றில் பிறந்தவர். மாயாவின் நட்பு ஸ்டூவெர்ட்டின் வாழ்க்கையையும் கலைப் பயணத்தையும் இலங்கையுடனும் இந்தத் தீவின் மனிதர்களுடனும் இயற்கையுடனும் பிணைத்தது. மாயாவின் மூலம், அவர் 1980ஆம் …

ஸலாம் அலைக் – ஒரு விருது

பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  சிறந்த ஆசிய நாவலுக்கான  Prix Émile Guimet – 2026 விருது ஷோபா சக்தியின் நாவலான ஸலாம் அலைக்கின் மொழிபெயர்ப்பிற்கு கிடைத்திருக்கிறது. மூத்தோனுக்கு வாழ்த்துகள்.  “நிகழ்வில், விருதளிப்புக் குழுவைச் சேர்ந்த Laure Adler “பிரெஞ்சு நாவல்களின் எதிர்காலம் ஸலாம் அலைக்கில் உள்ளது” எனவும், விருதுக் குழுவின் நடுவர் “ஸலாம் அலைக் நமக்குத் தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவில்லை, மாறாக நம்முடைய சொந்த இலக்கியத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்திருக்கிறது” என்றும் …

அற்பத்தனத்தை அகங்காரத்தால் எதிர்கொள்ளல்

  நாளைய தினம் தமிழ் புத்தகங்கள் மீது இலங்கைச் சுங்கம் காட்டி வரும் தடுத்து வைப்பு / தடை நிலமையைக் கண்டிக்கும் போராட்டம் ஒன்றை நிகழ்த்த சில நாட்களுக்கு முன்னர் நானொரு அழைப்பை என் தளத்தில் எழுதியிருந்தேன். வரும் ஞாயிறு காலை பத்து மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி கோயிலின் முன்பாகவும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் ஒன்று கூடுமாறு கோரியிருந்தேன். ஒரு எழுத்தாளனாக, சக குடிமகனாக. யாரும் வராமல் …

புத்தகங்கள் மீதான தடை

இலங்கை அரசின் தமிழ் புத்தகத் தடைக்கு எதிரான கண்டனமும் கூட்டு அறிக்கையும் “ஒரு புத்தகத்தைத் தடை செய்வது என்பது ஒரு  எழுத்தாளரின் ஒற்றைக் குரலை மட்டும் ஒடுக்குவதல்ல, மக்களின் நினைவுகளையும் அறியும் உரிமைகளையும் அழிப்பதாகும்” இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழ்ப் புத்தகங்களைத் தடை செய்து வருகிறது. சுங்கத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு  அமைச்சு ஆகியன பொறுப்பற்ற முறையிலும், தெளிவான காரணங்களின்றியும் தமிழ்ப் புத்தகங்களைத் தடுத்து வருகின்றன. இந்தத் தடைகள் சுதந்திரமான …

தீபச்செல்வன் மீது பொறாமையா? 

தீபச்செல்வன் தனது புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டிருந்த தயக்கத்தையும் கோணலையும் சுட்டிக்காட்டி எனது தளத்தில் தீபச்செல்வன் ஒரு கண்டனம் எனும் குறிப்பை எழுதியிருந்தேன். அதை பலரும் ஒரு வஞ்சமாகவோ புலிகளை எதிர்க்கும் மனநிலையாகவோ தமிழ்த்தேசியத்துக்கு எதிரானதாகவோ பொறாமையாகவோ தான் கருதியிருக்கிறார்கள் என்பதை சில உரையாடல்களில் அறிய முடிந்தது.  மீண்டும் அதைத் தொகுத்துச் சொல்கிறேன், தீபச்செல்வன் அமைச்சுக்கு எழுதிய கடிதத்தில் இரக்கம் கோரும் பாவனை இருந்தது. அப்பதிவை …