தத்வமசி : முற்பதிவு
“17ஆம் நூற்றாண்டின் சோழமண்டலக் கரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் டச்சுக்காரர்களின் காலனிய நிழல் படர்கிறது. குருதியும் அடிமை வணிகமும் பேரழிவும் மலிந்த பெருநிலத்தில், வாழ்வின் நிலையாமையை முகத்திலடித்தாற் போல் உணர்ந்து மனை துறக்கிறான் ஒருவன். அகத்தின் வெளிச்சத்தைத் தேடி அலையும் அவனுக்குக் காலம் சூட்டும் பெயர் ‘தத்வமசி’. கிரிசாந்தின் பிரம்மாண்டமான புனைவெழுத்து, வரலாற்றின் அந்தகார உண்மைகளையும் தத்துவத்தின் ஆழங்களையும் ஒன்றிணைக்கிறது. மானுட இருப்பைப் பற்றியும், அதன் நித்தியமான ஆன்மீகத் தேடலைப் பற்றியும் …
