இம்மாத (ஏப்ரல்) நீலம் இதழில் வந்துள்ள ‘பெருங்காவியம்’ சிறுகதை எனக்குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது சிறுகதை அல்ல. ஏழு கன்னிமார்கள் என்னும் தொன்மத்தை மறு உயிர்ப்புச் செய்து காட்டியுள்ள அப்புனைவு கவித்துவமான மொழியுடன் கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஈழத்தனி நாட்டுக்கான போர்க்காட்சிகளின் சில…
Category: கடிதங்கள்
புஞ்சி மல்லி – குறிப்பு
ஏப்ரல் உயிர்மை இதழில் எழுத்தாளர் கிரிசாந் அவர்களின் “புஞ்சி மல்லி” வாசித்தேன். சந்தனி என்னும் இளம் பெண்ணிற்கும், கந்துல என்னும் குட்டி யானைக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கோபித்துக் கொண்டு, காட்டில் தொலைந்து போன கந்துல குட்டியை சந்தனியுடன் நாமும்…
லீலி – கடிதம்
கதை நல்லா இருந்தது. உங்க கவித்துவமான மொழி நடை, இந்த கதையை ஒரு படி மேலெடுத்து செல்கிறது. “காதலைத் தட்டி எழுப்பாதீர்…தானே விரும்பும் வரை” இந்த ஒற்றை வரி மொத்தக் கதையையும் தாங்கி நிற்கிறது. ரோசி சிஸ்டருடான லீலி அம்மாவின் உறவு பற்றி வெளிப்படையாக…
கொடிறோஸ் – கடிதம்
வணக்கம் கிரிசாந், கொடிறோஸ் குறுநாவல் வாசித்தேன். மிக நேர்த்தியா எழுதி இருக்கிறீங்க. கதைக்கு உள்ளே வாழ்ந்தது போன்ற அனுபவம் கிடைத்தது. சில இடங்களில் கண்கள் பனித்தன. அம்மாவை நான் இழந்த போது எனக்கு முப்பது வயது. அவருக்கு இரத்தத்தில் கிருமி தொற்று.. நீண்ட காலம்…
பட்டு நூல் – கடிதம் 2
பட்டு நூல் வாசித்தேன். மிக அருமையான கதை. ஒரு யுத்த பூமியில் பண்பாடு என்பது எப்படி இருக்கும்னு காமிச்சிருக்கீங்க. அதை கதையில் விவாதமா அடுக்கடுக்கி வைச்சு சொல்லியிருப்பதும் அழகு. “பண்பாட்டில இருக்கிறதென்பது மீன் தண்ணிக்கை இருக்கிற மாதிரி …. உன்ர உடம்பால அதை அறிய…
கல்விரல் – குறிப்பு 4
ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ளன. ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்….
பட்டு நூல் – கடிதம்
வணக்கம் கிரி, பட்டுநூல் கதை வாசித்து முடிக்கும்போது நிறைவில் கண்கள் குளமாகிவிட்டன. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த எங்கள் பண்பாட்டு தனித்துவம் என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. சிலைக்கு கண் திறக்கும் செயல் கலையாக மாறுமிடம், குருபாவா முகைதீன் பற்றிய தரவுகள், கதையில்…
கல்விரல் – குறிப்பு 3
கிடாயில் அமர்ந்திருக்கும் பிசாசொன்று போரின் வடுக்களை மேய்கையில் அலையுறும் பெண் மனம் இந்நாவல். போருக்குப் பின்னான ஒரு நிலத்தில், செல்லடித்து விழுந்து கிடக்கும் ஒரு பனை மரத்தில், தனது கூட்டைத் தொலைத்துவிட்டு தேரிக்காடெங்கும் தேடியலைகிற தூக்கணாங் குருவியொன்று அதன் குஞ்சுகளின் அவலத்தை கழுகுகளுக்கும் பாம்புகளுக்கும்…
கல்விரல் – குறிப்பு 2
எழுத்தாளனின் படைப்புகளைப் புரிதலில் வெளியீட்டாளரின் அரசியல் நிலைபாடு ஒரு மறைமுகச் சூழலாக செயல்படும். வெளியீட்டாளர் எந்த வகை நூல்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். எவற்றைத் தவிர்க்கிறார்கள் என்பதன் வழியே அந்தப் படைப்புகளின் அரசியல் ரேகைகள் எவ்வாறு வடிகட்டப்படுகின்றன என்பதை கவனிக்கலாம். படைப்பு தனித்த உருட்டில் நின்றாலும், எழுத்தாளர்…
கல்விரல் – குறிப்பு
கல்லெடுத்தான் குளம் என்ற ஊரில் இருக்கும் மொட்டு என்றழைக்கப்படும், அரும்பி என இயக்கப்பெயரும் கொண்ட துளசி மற்றும் பொற்புதிர் அவளுக்கும் வீட்டுப்பெயர் தங்கம், இன்னொரு புனைப்பெயர் பெற்றி பூர்ஷ்வா அவர்களையும், போர் மற்றும் போருக்கு பிறகான கல்வி நிலையத்தை மையமாக கொண்டது தான் கிரிசாந்…