புத்தகங்கள் மீதான தடை

இலங்கை அரசின் தமிழ் புத்தகத் தடைக்கு எதிரான கண்டனமும் கூட்டு அறிக்கையும் “ஒரு புத்தகத்தைத் தடை செய்வது என்பது ஒரு  எழுத்தாளரின் ஒற்றைக் குரலை மட்டும் ஒடுக்குவதல்ல, மக்களின் நினைவுகளையும் அறியும் உரிமைகளையும் அழிப்பதாகும்” இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழ்ப் புத்தகங்களைத் தடை செய்து வருகிறது. சுங்கத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு  அமைச்சு ஆகியன பொறுப்பற்ற முறையிலும், தெளிவான காரணங்களின்றியும் தமிழ்ப் புத்தகங்களைத் தடுத்து வருகின்றன. இந்தத் தடைகள் சுதந்திரமான …

தீபச்செல்வன் மீது பொறாமையா? 

தீபச்செல்வன் தனது புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டிருந்த தயக்கத்தையும் கோணலையும் சுட்டிக்காட்டி எனது தளத்தில் தீபச்செல்வன் ஒரு கண்டனம் எனும் குறிப்பை எழுதியிருந்தேன். அதை பலரும் ஒரு வஞ்சமாகவோ புலிகளை எதிர்க்கும் மனநிலையாகவோ தமிழ்த்தேசியத்துக்கு எதிரானதாகவோ பொறாமையாகவோ தான் கருதியிருக்கிறார்கள் என்பதை சில உரையாடல்களில் அறிய முடிந்தது.  மீண்டும் அதைத் தொகுத்துச் சொல்கிறேன், தீபச்செல்வன் அமைச்சுக்கு எழுதிய கடிதத்தில் இரக்கம் கோரும் பாவனை இருந்தது. அப்பதிவை …

பள்ளிக்கு ஏன் தாமதமானது?

நான் சீக்கிரம் எழவில்லை,ஏனென்றால்நான் மிகவும் களைப்படைந்திருந்தேன்;நான் மிகவும் களைப்படைந்திருந்தது,ஏனென்றால்நான் தாமதமாக உறங்கச் சென்றேன்;நான் தாமதமாக உறங்கச் சென்றது,ஏனென்றால்எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது;எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது,ஏனென்றால்ஆசிரியர் அதை செய்யப் பணித்தார்;ஆசிரியர் அதை செய்யப் பணித்தது,ஏனென்றால்எனக்குப் பாடம் புரியவில்லை;எனக்குப் பாடம் புரியாததுஏனென்றால்நான் கவனிக்கவில்லை;நான் கவனிக்காதது,ஏனென்றால்நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்;நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது,ஏனென்றால்நான் ஒரு மேகத்தைக் கண்டேன்.ஐயா, நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்,நான் ஒரு மேகத்தைக் கண்டதுதான். ஸ்டீவ் டர்னர் மொழிபெயர்ப்பு …

பெருங்காவியம் : சிறுகதை

‘பெருங்காவியம்’ எனும் என் புதிய சிறுகதை நீலம் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : பெருங்காவியம்

லீலி – கடிதம்

கதை நல்லா இருந்தது. உங்க கவித்துவமான மொழி நடை, இந்த கதையை ஒரு படி மேலெடுத்து செல்கிறது. “காதலைத் தட்டி எழுப்பாதீர்…தானே விரும்பும் வரை” இந்த ஒற்றை வரி மொத்தக் கதையையும் தாங்கி நிற்கிறது.  ரோசி சிஸ்டருடான லீலி அம்மாவின் உறவு பற்றி வெளிப்படையாக சொல்லாமல் செல்வதும், அதே போல் மிர்னாவிற்கும், லீலிக்கும் உள்ள உறவும்… லீலியின் அம்மா அப்பாவின் சாவு நிகழ்வை பற்றிய உங்க சித்தரிப்பு பதைக்க வைத்தது. …

கொடிறோஸ் – கடிதம்

வணக்கம் கிரிசாந், கொடிறோஸ் குறுநாவல் வாசித்தேன். மிக நேர்த்தியா எழுதி இருக்கிறீங்க. கதைக்கு உள்ளே வாழ்ந்தது போன்ற அனுபவம் கிடைத்தது. சில இடங்களில் கண்கள் பனித்தன. அம்மாவை நான் இழந்த போது எனக்கு முப்பது வயது. அவருக்கு இரத்தத்தில் கிருமி தொற்று.. நீண்ட காலம் இழுத்தடி பட்டு இறந்தா. மரண வீட்டு கடைசி கட்டங்கள் கண் முன்னால் நடந்தன. வாசித்து முடிச்ச பிறகும் மனசில தாக்கம் இருந்தது. அம்மாவின் மரணம் …

நிஜந்தன் தோழன்

நிரப்புவதற்கு அப்பால் நின்றுவிட்டதுதூரம் முதலில் உன்னைத் தின்றுவிட்டிருக்கின்றனஇருவரில்ஒன்று போலிருந்த காயங்கள் மிச்சம்பேசியிருந்த கொஞ்ச வார்த்தைகள்,இனியில்லைமருந்துகளுக்கும் வலிகளுக்கும்மேலால் மேவி எழுகிற புன்னகை.அறியு முன்பேநழுவிவிட்ட முகமும் குரலும், சற்றுத் தாமதமாகவே வென்றிருக்கலாம் நீஉந்த வாழ்வையும்இந்தச் சாவையும் இனியில்லை உனக்குஇருண்டகாலத்துக் குரல்கள்,நித்திய விடுதலை,சமாதானிக்கட்டும் உனது வெண்மை. இல்லாது போனகருணையின் பாகங்கள் பொருட்டுஇன்னும் கொஞ்சம் கண்ணீர். ஒருநாள் வருவேன்உனது குரல் தொடுகிற தெருவில் மருந்து மணக்காத தாழ்வாரங்களில்குமிழ் எரிகிற இருளில்அவ்வப்போது கொள்கிற மாத்திரைகளில்சரிகிற புத்தகங்களில்கசிகிறதுனது குரல் …

நிஜந்தன் : அஞ்சலி

நேற்று மதியம் திடீரென்று என் ATM திறவுஇலக்கம் மறந்து விட்டது. சில கிழமைகளாக காசு எடுக்கவில்லை. எவ்வளவு நினைவில் துழாவியும் இலக்கங்கள் பகடைக் கட்டைகள் போல ஒவ்வொரு முறையும் புதிதாகச் சுழன்று விழுந்தன. நாளிற்கான மூன்று தடவைகளை அழுத்தினேன். மூன்றும் தவறு. தசை நினைவென திறவு இலக்கம் இருப்பது என் வழமை.  கடந்த இரண்டு கிழமையாக எழுதவும் மனநிலை கூரவில்லை. எழுதவும் வாசிக்கவும் மனம் பாய்ந்து கடிப்பதும் பிறகு கைவிட்டு …

லீலி : சிறுகதை

இம்மாதம் அச்சாகியிருக்கும் பங்குனி மாதத்திற்கான ஜீவநதி இதழில் எனது புதிய சிறுகதையான ‘லீலி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.