புஞ்சி மல்லி : சிறுகதை
இம்மாத உயிர்மை இதழில் எனது புதிய சிறுகதையான ‘புஞ்சி மல்லி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
இம்மாத உயிர்மை இதழில் எனது புதிய சிறுகதையான ‘புஞ்சி மல்லி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டு நூல் வாசித்தேன். மிக அருமையான கதை. ஒரு யுத்த பூமியில் பண்பாடு என்பது எப்படி இருக்கும்னு காமிச்சிருக்கீங்க. அதை கதையில் விவாதமா அடுக்கடுக்கி வைச்சு சொல்லியிருப்பதும் அழகு. “பண்பாட்டில இருக்கிறதென்பது மீன் தண்ணிக்கை இருக்கிற மாதிரி …. உன்ர உடம்பால அதை அறிய வேணும்.” … அதெல்லாம் வாசிக்கும் போது ஆமால்ல… னு சொல்லத் தோணுச்சு… அப்புறம் விஷ்ணுபுரம் படிச்சிட்டு கோயில் கோயிலா சுத்தாதவங்க யாராவது இருப்பாங்களா.. எனக்கு …
ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ளன. ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இது இவரது சமீபத்திய நாவல். இத்தனை வருடங்கள் வாழ்ந்த பிறகு தோன்றும் பட்டறிவு, இருத்தலைக் காப்பாற்றிக் கொள்வதே எல்லாவற்றிலும் முக்கியமானது. நாம் தனியல்ல, ஒரு …
வணக்கம் கிரி, பட்டுநூல் கதை வாசித்து முடிக்கும்போது நிறைவில் கண்கள் குளமாகிவிட்டன. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த எங்கள் பண்பாட்டு தனித்துவம் என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. சிலைக்கு கண் திறக்கும் செயல் கலையாக மாறுமிடம், குருபாவா முகைதீன் பற்றிய தரவுகள், கதையில் யாழ்ப்பாண சித்தர் வரும் தருணம் போன்றவை கதைக்குச்சிறப்பான வாசிப்பனுபவத்தை அளித்தது. நன்றி. அன்புடன் மாக்கி * சிலைக்கு கண் திறப்பது போலத் தான் பகுத்தறிவும் …
காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர், எழுத்தாளர் அரவிந்தன் இன்று காலமாகினார். நட்புடன் பழகுபவர். அவரது திடீர் இழப்பு காலச்சுவட்டுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் அறிவுச்சூழலுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய புன்னகையும் சாந்தமுமான முகம் இனியது. அவருக்கு என் அஞ்சலிகள்.
‘பட்டு நூல்’ எனும் என் புதிய சிறுகதை அம்ருதா ஏப்ரல் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : அம்ருதா ஏப்ரல்
நாங்கள் ஒரு கூட்டமாக அந்த மைதானத்தின் கரையிலிருந்த வாகை மரத்தின் வேர்ப்புடைப்பில் அமர்ந்திருந்தோம். தின்னவேலிச் சந்தைக்கு அருகிலிருந்த பாடசாலையின் மைதானம் அது. வெறும் புழுதி நிலம். உச்சி வெய்யில் நடு மைதானத்தில் உள்ளங்கை போலத் தெளிந்து கிடந்தது. பிரகாஸ் தனது காற்சட்டையின் சிப்பை திறந்து ஆண் குறியை வெளியே எடுத்து பிடித்தபடி “என்ர சாமான் எவ்வளவு பெரிசெண்டு பார்த்தியளேடா” என்றான். எல்லோரும் புதினமாக அதைப் பார்த்தோம். கப்பல் வாழைப் பழம் …
“நேற்றைய நாளில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தமையால் மிகவும் மனவேதனைக்கு உள்ளானேன். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற எனது நூல்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொதியாக வந்தவேளையில், ‘இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை’ என்று காரணம் கூறப்பட்டு இலங்கை சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டன. கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கும் பட்சத்திலேயே புத்தகங்கள் விடுவிக்கப்படும் என்று சுங்கப் பிரிவு அறிவித்திருந்தது. …
‘சுருட்டை’ எனும் என் புதிய சிறுகதை கனலி இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை தளத்தில் பின்னூட்டமோகவோ அல்லது Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அனுப்பி வையுங்கள். இணைப்பு : சுருட்டை
19 வயதில் தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் யாரோ ஒருவரின் கண்ணீரை துடைக்க கொடுத்த மனம் அதன் தன்மை மாறாமல் இன்றும் அப்படியே இருக்கிறது. குக்கூ துவங்கிய நாள் தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா செயல்கள் நம்பிக்கைகள் நினைத்து பார்க்க முடியாதளவு மனிதர்கள் நன்மை அடைந்துள்ளனர். ஒரு பெரும் செயல்கள் நில்லாமல் இந்திய நிலப்பரப்பெங்கும் நடைப்பெறுகிறது. இந்த தினமணியின் முதல் பக்க செய்தி 1999 ஆண்டில் வெளியானது. இத்தனை காலம் ஒன்றில் நிலைத்திருந்து …