புஞ்சி மல்லி – குறிப்பு

ஏப்ரல் உயிர்மை இதழில் எழுத்தாளர் கிரிசாந் அவர்களின் “புஞ்சி மல்லி” வாசித்தேன். சந்தனி என்னும் இளம் பெண்ணிற்கும், கந்துல என்னும் குட்டி யானைக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கோபித்துக் கொண்டு, காட்டில் தொலைந்து போன கந்துல குட்டியை சந்தனியுடன் நாமும் சேர்ந்து தேடுகிறோம். புஞ்சி மல்லி என்றால், குட்டி தம்பி என்று அர்த்தமாம். அழகு. இருவருக்கும் இடையே உள்ள உறவை சந்தனியின் வழியாக சொல்லி இருப்பது …

புஞ்சி மல்லி – சிறுகதை

“யானைக்கு உன் குரல் தெரிந்து விட்டால் அது தான் அங்குசம்” என அப்பா சொல்லியது காதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. தென்னையோலைகளை அடித்துச் சுழற்றிக் காற்று வீசியது. பெரிய தும்பிக்கையிலிருந்து நீர் பிசிறுவது போல ஓசையுடன் ஓலைகள் துள்ளின. “கந்துல… கந்துல.. இங்கே வா..” எனக் கூவினேன். தொண்டை நரம்புகள் வறண்டு ஊசி குத்துவது போல வலியெழுந்தது. “கந்துல ஒரு குட்டி அற்புதம். அவன் உனக்கு வரலாற்றில் ஒரு மகத்தான வாய்ப்பை …

அலைந்து உழலும் ஒரு மனதின் கதைகள்

கொழும்பில் இயங்குகின்ற Barefoot gallery யில் அலெக்ஸ் ஸ்டூவெர்ட் எனும் ஓவியரின் கண்காட்சியொன்றை அண்மையில் பார்த்தேன். 1970களில் லண்டனின் கலைச் சூழலில் பணியாற்றிய காலத்தில், அலெக்ஸ் ஸ்டூவெர்ட்க்கும் (பி. 1958), மாயா ரத்வத்தேவுடன் நெருங்கிய நட்பு உருவாகியிருக்கிறது. மாயா ரத்வத்தே கண்டியின் செல்வாக்கு மிக்க குடும்பமொன்றில் பிறந்தவர். மாயாவின் நட்பு ஸ்டூவெர்ட்டின் வாழ்க்கையையும் கலைப் பயணத்தையும் இலங்கையுடனும் இந்தத் தீவின் மனிதர்களுடனும் இயற்கையுடனும் பிணைத்தது. மாயாவின் மூலம், அவர் 1980ஆம் …

ஸலாம் அலைக் – ஒரு விருது

பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  சிறந்த ஆசிய நாவலுக்கான  Prix Émile Guimet – 2026 விருது ஷோபா சக்தியின் நாவலான ஸலாம் அலைக்கின் மொழிபெயர்ப்பிற்கு கிடைத்திருக்கிறது. மூத்தோனுக்கு வாழ்த்துகள்.  “நிகழ்வில், விருதளிப்புக் குழுவைச் சேர்ந்த Laure Adler “பிரெஞ்சு நாவல்களின் எதிர்காலம் ஸலாம் அலைக்கில் உள்ளது” எனவும், விருதுக் குழுவின் நடுவர் “ஸலாம் அலைக் நமக்குத் தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவில்லை, மாறாக நம்முடைய சொந்த இலக்கியத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்திருக்கிறது” என்றும் …

பொழிவு

நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வெறுமையாக கைகளை நீட்டிக் கொண்டு வெய்யில் பொழிவதை ஏந்திக் கொண்டு தனிமையை வேடிக்கை பார்த்துக் கொண்டு உன்னை நீயே நொந்து கொண்டு உனக்கு நீயே ஆறுதல் சொல்லிக் கொண்டு மஞ்சள் பூக்கள் பெய்வதைப் பார்த்தபடி உனக்கு யாரும் இல்லையென்பதை உணர்ந்ததாகச் சொன்னாய் அப்படி ஒருவரும் உடனே ஞானத்தை அடைவதில்லை என்றேன். பரிவில்லாத நாட்களின் போதும் அஸ்த்தமனங்களிலும் உதயங்களிலும் நீ பார்க்கிறாய் சூரியன் ஒளிர்கிறது …

அற்பத்தனத்தை அகங்காரத்தால் எதிர்கொள்ளல்

  நாளைய தினம் தமிழ் புத்தகங்கள் மீது இலங்கைச் சுங்கம் காட்டி வரும் தடுத்து வைப்பு / தடை நிலமையைக் கண்டிக்கும் போராட்டம் ஒன்றை நிகழ்த்த சில நாட்களுக்கு முன்னர் நானொரு அழைப்பை என் தளத்தில் எழுதியிருந்தேன். வரும் ஞாயிறு காலை பத்து மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி கோயிலின் முன்பாகவும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் ஒன்று கூடுமாறு கோரியிருந்தேன். ஒரு எழுத்தாளனாக, சக குடிமகனாக. யாரும் வராமல் …

புத்தகங்கள் மீதான தடை

இலங்கை அரசின் தமிழ் புத்தகத் தடைக்கு எதிரான கண்டனமும் கூட்டு அறிக்கையும் “ஒரு புத்தகத்தைத் தடை செய்வது என்பது ஒரு  எழுத்தாளரின் ஒற்றைக் குரலை மட்டும் ஒடுக்குவதல்ல, மக்களின் நினைவுகளையும் அறியும் உரிமைகளையும் அழிப்பதாகும்” இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழ்ப் புத்தகங்களைத் தடை செய்து வருகிறது. சுங்கத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு  அமைச்சு ஆகியன பொறுப்பற்ற முறையிலும், தெளிவான காரணங்களின்றியும் தமிழ்ப் புத்தகங்களைத் தடுத்து வருகின்றன. இந்தத் தடைகள் சுதந்திரமான …

தீபச்செல்வன் மீது பொறாமையா? 

தீபச்செல்வன் தனது புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டிருந்த தயக்கத்தையும் கோணலையும் சுட்டிக்காட்டி எனது தளத்தில் தீபச்செல்வன் ஒரு கண்டனம் எனும் குறிப்பை எழுதியிருந்தேன். அதை பலரும் ஒரு வஞ்சமாகவோ புலிகளை எதிர்க்கும் மனநிலையாகவோ தமிழ்த்தேசியத்துக்கு எதிரானதாகவோ பொறாமையாகவோ தான் கருதியிருக்கிறார்கள் என்பதை சில உரையாடல்களில் அறிய முடிந்தது.  மீண்டும் அதைத் தொகுத்துச் சொல்கிறேன், தீபச்செல்வன் அமைச்சுக்கு எழுதிய கடிதத்தில் இரக்கம் கோரும் பாவனை இருந்தது. அப்பதிவை …

பள்ளிக்கு ஏன் தாமதமானது?

நான் சீக்கிரம் எழவில்லை,ஏனென்றால்நான் மிகவும் களைப்படைந்திருந்தேன்;நான் மிகவும் களைப்படைந்திருந்தது,ஏனென்றால்நான் தாமதமாக உறங்கச் சென்றேன்;நான் தாமதமாக உறங்கச் சென்றது,ஏனென்றால்எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது;எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது,ஏனென்றால்ஆசிரியர் அதை செய்யப் பணித்தார்;ஆசிரியர் அதை செய்யப் பணித்தது,ஏனென்றால்எனக்குப் பாடம் புரியவில்லை;எனக்குப் பாடம் புரியாததுஏனென்றால்நான் கவனிக்கவில்லை;நான் கவனிக்காதது,ஏனென்றால்நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்;நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது,ஏனென்றால்நான் ஒரு மேகத்தைக் கண்டேன்.ஐயா, நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்,நான் ஒரு மேகத்தைக் கண்டதுதான். ஸ்டீவ் டர்னர் மொழிபெயர்ப்பு …