யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் ஆறாம் வகுப்பிற்குச் சேர்ந்து முதல் நாள் ஆங்கிலப் பாடம். மூன்று அடுக்குகளாக உயர்ந்திருந்த கட்டடத்தில் என் வகுப்பிருந்தது. மகேஸ்வரன் சேர் துணி ஜீன்சும் அரைக்கைச் சேர்ட்டும் போட்டுக் கொண்டு வந்து ஆங்கிலப் பாடம் தொடங்கினார். அவரது உச்சரிப்பு மிகவும்…
பரிஸ் – கல்விரல்
பரிஸ் நகரில் கடுதாசி நட்சத்திரம், கல்விரல், சிறகை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கின்றன. சுவரொட்டியில் உள்ள இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.
புஞ்சி மல்லி : சிறுகதை
இம்மாத உயிர்மை இதழில் எனது புதிய சிறுகதையான ‘புஞ்சி மல்லி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டு நூல் – கடிதம் 2
பட்டு நூல் வாசித்தேன். மிக அருமையான கதை. ஒரு யுத்த பூமியில் பண்பாடு என்பது எப்படி இருக்கும்னு காமிச்சிருக்கீங்க. அதை கதையில் விவாதமா அடுக்கடுக்கி வைச்சு சொல்லியிருப்பதும் அழகு. “பண்பாட்டில இருக்கிறதென்பது மீன் தண்ணிக்கை இருக்கிற மாதிரி …. உன்ர உடம்பால அதை அறிய…
கல்விரல் – குறிப்பு 4
ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ளன. ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்….
பட்டு நூல் – கடிதம்
வணக்கம் கிரி, பட்டுநூல் கதை வாசித்து முடிக்கும்போது நிறைவில் கண்கள் குளமாகிவிட்டன. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த எங்கள் பண்பாட்டு தனித்துவம் என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. சிலைக்கு கண் திறக்கும் செயல் கலையாக மாறுமிடம், குருபாவா முகைதீன் பற்றிய தரவுகள், கதையில்…
அரவிந்தன் : அஞ்சலி
காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர், எழுத்தாளர் அரவிந்தன் இன்று காலமாகினார். நட்புடன் பழகுபவர். அவரது திடீர் இழப்பு காலச்சுவட்டுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் அறிவுச்சூழலுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய புன்னகையும் சாந்தமுமான முகம் இனியது. அவருக்கு என் அஞ்சலிகள்.
பட்டு நூல் : சிறுகதை
‘பட்டு நூல்’ எனும் என் புதிய சிறுகதை அம்ருதா ஏப்ரல் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : அம்ருதா ஏப்ரல்
ஒளியிலே தெரிவது : சிறுகதை
நாங்கள் ஒரு கூட்டமாக அந்த மைதானத்தின் கரையிலிருந்த வாகை மரத்தின் வேர்ப்புடைப்பில் அமர்ந்திருந்தோம். தின்னவேலிச் சந்தைக்கு அருகிலிருந்த பாடசாலையின் மைதானம் அது. வெறும் புழுதி நிலம். உச்சி வெய்யில் நடு மைதானத்தில் உள்ளங்கை போலத் தெளிந்து கிடந்தது. பிரகாஸ் தனது காற்சட்டையின் சிப்பை திறந்து…
தீபச்செல்வன் : ஒரு கண்டனம்
“நேற்றைய நாளில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தமையால் மிகவும் மனவேதனைக்கு உள்ளானேன். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற எனது நூல்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொதியாக வந்தவேளையில், ‘இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை’ என்று காரணம் கூறப்பட்டு இலங்கை சுங்கப்…